உள்ளூர் செய்திகள்

துவக்கப்பள்ளி ஆசிரியருக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

திருப்பூர்: துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி வழங்கப்பட்டது.ஆரம்பக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு எளிய முறையில் பாடங்களை கற்பித்து, அவர்களுக்கு புரிய வைக்கும் நோக்கில் எண்ணும், எழுத்தும் திட்டத்தில் பாடம் பயிற்றுவிக்கப்படுகிறது. புதிய மற்றும் எளிய முறையில் கற்றல், கற்பித்தல் செயல்பாடு குறித்து, துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.அவ்வகையில், புதிய கல்வியாண்டு துவங்கியுள்ள நிலையில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி திருப்பூர், கே.எஸ்.சி., பள்ளியில் வழங்கப்படுகிறது. வகுப்பறையில் ஆசிரியர்கள் சொல் கேட்டு, பாடங்களை உள்வாங்கி படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையிலான செயல்பாடுகளை ஆசிரியர்கள் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன.கே.எஸ்.சி., பள்ளியில் நடந்த, எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாமில், மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிப்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்