உள்ளூர் செய்திகள்

பள்ளிக்கல்வி இயக்குனராக கண்ணப்பன் நியமனம்

சென்னை: தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன், பள்ளிக்கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி, இன்றுடன் ஓய்வு பெறுகிறார். அதன் காரணமாக, தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன், பள்ளிக்கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார். அரசுத் தேர்வுகள் இயக்கக இயக்குனர் சேதுராமவர்மா, தொடக்க கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்கக இயக்குனர் லதாவிடம், அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குனர் பொறுப்பு, கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை பள்ளிக்கல்வித்துறை செயலர் குமரகுருபரன் பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்