உள்ளூர் செய்திகள்

இரண்டாம் பருவத்துக்கான புத்தகங்கள் வினியோகிக்க தயார்

உடுமலை : உடுமலை கோட்டத்துக்குட்ட அரசு பள்ளிகளுக்கான, இரண்டாம் பருவ பாடப்புத்தகங்கள் மாவட்ட கல்வித்துறையிலிருந்து அனுப்பப்பட்டுள்ளன.அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு, காலாண்டு விடுமுறை முடிந்து அக்., 7ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் வட்டாரத்தில் சராசரியாக 500, அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன.இரண்டாம் பருவம் துவங்க உள்ளதையொட்டி, மாவட்ட கல்வித்துறையிலிருந்து அந்தந்த வட்டாரங்களுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பப்பட்டுள்ளன. உடுமலையில் பார்க் ரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளி, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளத்தில் வட்டார கல்வி அலுவலகங்களில்புத்தகங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.இரண்டாம் பருவம் துவங்கும் முதல் நாளில் மாணவர்களுக்கு, புத்தகங்கள் கிடைக்கும் வகையில், அந்தந்த பள்ளிகளுக்கு நேரடியாக வட்டார கல்வித்துறையின் சார்பில், புத்தகங்களை வழங்குவதற்கு மாவட்ட கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்