உள்ளூர் செய்திகள்

இணைய மோசடி குறித்து விழிப்புணர்வு வேண்டும்

கோவை: நவஇந்தியா, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியில் இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை வகித்தார்.கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், இணையப்பாதுகாப்பு இதழை வெளியிட்டு பேசுகையில், தற்போது இணைய குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பொதுமக்கள் விழிப்புடன் இருந்தால், குற்றங்களை தடுக்கலாம், என்றார்.கோவை சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் அருண், இணையப்பாதுகாப்பு குறித்து செயல்விளக்கம் அளித்தார். மாணவர்கள் இணையப்பாதுகாப்பு குறித்து கவிதை, மவுனநாடகம், குறும்படம் ஆகியவற்றை நிகழ்த்தினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்