முன்னாள் முதல்வர் கருணாநிதி நுால்கள் நாட்டுடைமை
சென்னை: தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், தமிழ் சான்றோர்களின் நுால்கள், நாட்டுஉடைமை ஆக்கப்படுகின்றன. இதுவரை, 188 தமிழ் அறிஞர்களின் நுால்கள், நாட்டுடைமை ஆக்கப்பட்டு உள்ளன.அந்த வகையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நுால்கள் அனைத்தும், நுாலுரிமை தொகையின்றி, நாட்டுஉடைமை ஆக்கப்படும் என, ஆகஸ்ட் 22ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, கருணாநிதி எழுதிய அனைத்து நுால்களும் நாட்டுடைமை ஆக்கப்பட்டு உள்ளன.இதற்கான அரசாணையை, கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தியிடம், அவரது வீட்டில், அமைச்சர் சாமிநாதன் வழங்கினார். அப்போது, கருணாநிதியின் மகள் கனிமொழி, செய்தித்துறை செயலர் ராஜாராமன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் அருள் ஆகியோர் உடனிருந்தனர்.