தமிழகத்தில் துணைவேந்தர்களுக்கு அழுத்தம்: கவர்னர் குற்றச்சாட்டு
சென்னை: தமிழகத்தில் கவர்னர்கள் செயல்பட முடியாத அளவுக்கு மிகப்பெரிய அழுத்தம் உள்ளது என கவர்னர் ரவி கூறியுள்ளார்.சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கவர்னர் ரவி பேசியதாவது: கவர்னர் மாளிகையில் பல சிலைகள் இருந்தாலும், அதில் பாரதியார் சிலை இல்லாமல் இருந்தது. பாரதிய வித்யா பவன் உதவியால் தான் சிலை நிறுவப்பட்டது. பாரதியார் பெயரில் பல்கலை இருந்தாலும், அவருக்கு என பல்கலைகளில் இருக்கை ஏதும் இல்லை.60 ஆண்டுகளாக தமிழ், தமிழ் என்று பேச மட்டுமே அரசியல் செய்கின்றனர். தமிழர்களுக்கு தமிழ் இலக்கியத்திற்கும் எந்த சேவையும் செய்யப்படவில்லை. தமிழகத்தில் துணைவேந்தர்கள் செயல்பட முடியாமல் மிகப்பெரிய அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்நிலை விரைவில் மாறும். இவ்வாறு கவர்னர் ரவி பேசினார்.