உள்ளூர் செய்திகள்

யு டர்ன் அடிக்கவில்லை: அமைச்சர் விளக்கம்

சென்னை: பிஎம் ஸ்ரீ திட்டம் குறித்து, மத்திய கல்வி அமைச்சர் தெரிவித்த போது, நாங்கள் மாநில அளவில் குழு அமைத்து, அதன் கருத்தை அறிந்து ஏற்கிறோம் என்று கூறியிருந்தோம் என்று அமைச்சர் மகேஷ் கூறியுள்ளார்.பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் அளித்த பேட்டி:பிஎம் ஸ்ரீ திட்டம் குறித்து, மத்திய கல்வி அமைச்சர் பிரதான் தெரிவித்த போது, நாங்கள் மாநில அளவில் குழு அமைத்து, அதன் கருத்தை அறிந்து ஏற்கிறோம் என்றோம்.அதாவது, ஏற்கனவே, எஸ்.எஸ்.ஏ., நிதி கிடைத்த நிலையில், அதை தருவார் என்ற நம்பிக்கையில் இருந்தோம்.தமிழக கல்விக்குழுவோ, பிஎம் ஸ்ரீ திட்டம் முழுக்க, புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் செயல்படுவதாக அறிக்கை அளித்தது. அதன் அடிப்படையில், புதிய கல்விக் கொள்கையை நீக்கிவிட்டு, மற்றவற்றை ஏற்பதாக கடிதம் எழுதினோம்.நாங்கள், எம்.பி.,க்களுடன் அவரை சந்தித்தபோது, நம் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளிடம், நாங்கள் கொடுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கருத்துகளை மாற்ற, உங்களுக்கு யார் அதிகாரம் அளித்தது என்றுகூட கேட்டார்.அப்போது, எங்கள் மாநிலத்தின் கொள்கை முடிவையே, அவர்கள் பிரதிபலித்துள்ளனர் என்று விளக்கி, எப்போதும் வழங்க வேண்டிய எஸ்.எஸ்.ஏ., நிதியை வழங்கும்படி கோரினோம்.குழந்தைகளை அறிவியல் சார்ந்த துறைகளில் முன்னேற்ற வேண்டிய நேரத்தில், மும்மொழி என கட்டுப்படுத்தி, அவர்களை பின்னோக்கி இழுக்கக்கூடாது என்ற திடமான முடிவுடன், தமிழக அரசு செயல்படுகிறது.கல்வியில், கேரளாவும், தமிழகமும் சிறந்து விளங்குகின்றன. தமிழகத்தில் கல்வி சார்ந்த பணிகளுக்காக அதிக நிதி ஒதுக்கி, நிறைய புதிய திட்டங்களை செயல்படுத்த, மத்திய அரசு நிதி கொடுக்க வேண்டும். அதை செய்யாமல், யு டர்ன் அடித்து விட்டதாக, இல்லாத குற்றச்சாட்டை வைப்பது ஏற்புடையது அல்ல.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்