உள்ளூர் செய்திகள்

ராஜஸ்தானில் விபத்து; சென்னை மாணவர் பலி

ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் நடந்த சாலை விபத்தில், சென்னை மாணவர் உட்பட மூன்று பேர் பலியாகினர்.ராஜஸ்தான் மாநிலம், நாகவுர் மாவட்டம் லால்டாஸ்ஜி மஹராஜ் டம் பகுதி அருகே, ஆம்னி பஸ்சும், லாரியும் நேற்று அதிகாலை நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உள்ளூர் மக்களின் உதவியுடன் பஸ்சில் சிக்கிய நபர்களை மீட்டனர்.இதில், மூன்று பேர் பலியான நிலையில், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட எட்டு பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உயிரிழந்த மூன்று மாணவர்களும் ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள தேசிய சட்டப்பல்கலையில் படித்தவர்கள்.பஞ்சாபின் பாட்டியாலாவில் நடந்த விளையாட்டு போட்டியில் பங்கேற்ற பின், தங்கள் கல்லுாரிக்கு செல்ல, ஜோத்பூருக்கு ஆம்னி பஸ்சில் சென்ற போது இந்த விபத்து நேர்ந்தது. உயிரிழந்தவர்களில் ஒருவர், சென்னையை சேர்ந்த ஹர்ஷித் வஷிஸ்டா என, தெரியவந்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்