பாலியல் குற்றம் தடுக்க புதிய திட்டம்
சென்னை: சென்னையில் மட்டுமின்றி, கோவை, திருச்சி, மதுரை மற்றும் தாம்பரம், ஆவடி ஆகிய பகுதிகளிலும், பெண்களுக்கான குற்றங்களை தடுக்க, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.அதன்படி, குற்றங்களை தடுத்திடும் வகையில் நகரங்களில், சிசிடிவிக்கள் பொருத்தப்படும். இதில், எப்.ஆர்.எஸ்., எனப்படும் முக அடையாளங்கள் வாயிலாக காணும் மென்பொருள் இடம்பெறும்.இத்திட்டம், 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.