மருத்துவ கல்லுாரியில் பயிற்சி பட்டறை
புதுச்சேரி: இந்திராகாந்தி மருத்துக் கல்லுாரி, மருத்துவமனையில் நடந்த ஆராய்ச்சி தொடர்பாக, பயிற்சி பட்டறையில் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.மருத்துவக் கல்லுாரியில் மருத்துவ ஆராய்ச்சி தொடர்பாக, கடந்த இரண்டு நாட்கள் பயிற்சி பட்டறை நடந்தது. அதன் நிறைவு விழாவை, இந்திரா காந்தி மருத்துவக் கல்லுாரி இயக்குநர் உதய சங்கர் துவக்கி வைத்தார். பின்னர் மருத்துவ ஆராய்ச்சி பற்றி சிறப்புரை நிகழ்த்தினார்.மருத்துவர் ஐயப்பன் வரவேற்றார். மருத்துவ கல்லுாரி மாணவர் ரகுவீர் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தார். பயிற்சி பட்டறையில் சிறப்பு மருத்துவர்கள், மருத்துவம் முதுநிலை பயிலும் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.மருத்துவர் கவிதா நன்றி கூறினார்.