உள்ளூர் செய்திகள்

ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு அமெரிக்க பெல்லோஷிப்

மதுரை: மதுரையைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜமாணிக்கத்திற்கு அமெரிக்க பல்கலையின் ஹம்ப்ரி பெல்லோஷிப் கிடைத்துள்ளது.அமெரிக்காவில் உள்ள கார்னல் பல்கலையில் ஹியூபர்ட் எச். ஹம்ப்ரி பெல்லோஷிப் படிப்பில் சேர அனுமதி கிடைத்தது. கடந்தாண்டு அமெரிக்கா சென்ற இவர், இயற்கை வள மேலாண்மை, காலநிலை மாற்றத்தில் நிபுணத்துவம் பெற்று இந்த பெல்லோஷிப்பை முடித்துள்ளார்.ராஜமாணிக்கம் தன்னுடைய பெல்லோஷிப் காலத்தில் 93 நாடுகளைச் சேர்ந்த 141 பேரைக் கொண்ட குழுவில் இருந்தார். இந்தியாவில் இருந்து காலநிலைமாற்ற ஆய்வில் ஒரே பிரதிநிதியாக பங்கேற்ற இவர் விவசாயம், கிராம வளர்ச்சி, இயற்கை வள மேலாண்மை போன்ற துறைகளில் முக்கிய பங்களிப்பை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்