உள்ளூர் செய்திகள்

டாடா எலக்ட்ரானிக்ஸ் ஜெர்மன் நிறுவனம் கூட்டு

புதுடில்லி: டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், ஜெர்மனியைச் சேர்ந்த செமிகண்டக்டர் பொருட்கள் தயாரிப்பாளரான, 'மெர்க் எலக்ட்ரானிக்ஸ்' நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.டில்லியில் நடைபெற்று வரும் செமிகான் இந்தியா மாநாட்டில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், குஜராத்தின் தோலேரா பகுதியில் 91,000 கோடி ரூபாய் முதலீட்டில் செமிகண்டக்டர் உற்பத்தி ஆலை அமைத்து வருகிறது. இங்கு உற்பத்திக்கு தேவையான மிக துாய்மையான மின்னணு பொருட்கள், அதி நவீன எரிவாயு மற்றும் ரசாயன வினியோக முறைகளை, மெர்க் நிறுவனத்திடம் இருந்து பெற டாடா எலக்ட்ரானிக்ஸ் முடிவு செய்துள்ளது.இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, உள்ளூரில் சேமிப்பு கிடங்கு வசதிகள் அமைப்பது, மூலப் பொருட்கள் வினியோக தொடர் மேம்பாடு, திறமையாளர்களை உருவாக்குவது, தொழில் முறைகள் மற்றும் தரநிலைகளை ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்