பட்டயத் தேர்வு: மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்
சென்னை: கடந்த மே/ஜூன் 2025-ல் நடைபெற்ற தொடக்கக் கல்வி பொதுத்தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் தங்கள் மதிப்பெண் நகலை பெறுவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு பட்டயப் படிப்பு (DEE) தேர்வுகளில் பங்கேற்ற மாணவர்கள், தங்களது மாவட்ட கல்வி மற்றும் ஆசிரியர் பயிற்சி மையங்களில் அக்.,15 வெளியிடப்பட்டது.விண்ணப்பம் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பெறலாம். இதற்கான கட்டணம் ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.275 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.மேலும், மதிப்பெண் நகலுடன் மறு மதிப்பீடு அல்லது மதிப்பெண் மறுகூட்டல் தேவையெனில், அதற்கான தனி விண்ணப்பங்களையும் சமர்ப்பிக்கலாம் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.விண்ணப்பங்கள் நாளை காலை 11 மணி முதல் 22 மாலை 5 மணி வரை பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.