கல்வி உதவித்தொகை, சாக்லேட் தயாரிப்பு பயிற்சி
சி.பி.எஸ்.இ., எனும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் சார்பில், ஒற்றை பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகைக்கு, நவ., 20ம் தேதி வரை, www.cbse.gov.in என்ற இணையதளம் வாயிலாக, புதிதாக விண்ணப்பிக்கலாம்.சென்னை கிண்டி, திரு.வி.க., தொழிற்பேட்டை, சிப்பெட் கல்லுாரி எதிரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலையின் தகவல் மற்றும் பயிற்சி மையத்தில், வரும் 30ம் தேதி சாக்லேட் தயாரிப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது. மறுநாள், கைகளால் ஆபரணங்கள் செய்யும் பயிற்சி வழங்கப்பட உள்ளது. விருப்பம் உள்ளோர், 044 - 2953 0048 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.