உள்ளூர் செய்திகள்

ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு தே.மு.தி.க., வலியுறுத்தல்

சென்னை: தமிழக கல்வித்துறையில், இடைநிலை ஆசிரியர்கள் முறையான ஊதியம் மற்றும் சலுகைகளை எதிர்பார்த்து, நீண்ட காலமாக காத்திருக்கின்றனர். தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தாலும், பணி மற்றும் தகுதிக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படவில்லை.'சம வேலைக்கு சம ஊதியம்' என்பதே, அவர்களின் முக்கிய கோரிக்கை. இந்த கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கான, உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வு வழங்கும் வகையில், முன்பிருந்த நடைமுறையை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு தேமுதிக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்