உள்ளூர் செய்திகள்

பெரியார் பல்கலையில் மகளிர் தின விழா

ஓமலுார்: சேலம் பெரியார் பல்கலையில், மகளிரியல் மையம் சார்பில். சர்வதேச மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. பல்கலை நிர்வாகக்குழு உறுப்பினர் சுப்பிரமணி, 'கல்வி, தலைமைத்துவம், சமூக முன்னேற்றத்தில் பெண்களின் பங்கு மிகவும் அவசியம்' என அறிவுத்தினார்.சிறப்பு விருந்தினரான, சேலம் மத்திய சிறை பார்வையாளர் கஸ்துாரி, தியானம், நேர்மறை சிந்தனை, தன்னம்பிக்கை மனிதர்களின் மனநலன், சமூக ஒற்றுமை மிகவும் முக்கியம் என அறிவுறுத்தினார். மகளிரியல் மைய இயக்குனர் நாஸ்னி, துணை இயக்குனர் ராதிகா உள்பட பலர் பங்கேற்றனர்.உணவு வழங்கல்பனமரத்துப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் பெண் அலுவலர்கள், பணியாளர்கள் ஒரே சீருடையில் வந்து, ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை தெரிவித்து, இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர். மேலும் பெண் பணியாளர்கள் சார்பில் மற்ற அலுவலக பணியாளர்கள், ஊராட்சி செயலர்கள் உள்ளிட்டோருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.கோலப்போட்டிஆத்துார் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கோலப்போட்டி நடந்தது. நீதிமன்ற ஊழியர்கள், வக்கீல்கள், பெண்கள் பாதுகாப்பு மற்றும் பெண்கள் பெருமைகள், இன்றைய நிலை, தேவையானவை குறித்து, விழிப்புணர்வு கோலமாக தீட்டினர். சார்பு நீதிபதி கணேசன், நீதிபதி ஜான்சிராணி ஆகியோர் பார்வையிட்டு பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்