உள்ளூர் செய்திகள்

சேலத்தில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

சேலம்: திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி சார்பில் சேலம், சாமுண்டி காம்ப்ளக்ஸ், நிர்வாக அலுவலகம் அருகில், தரைதளம், நால்ரோடு, சேலத்தில் உள்ள பயிற்சி நிலையத்தில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி அளிக்கப்படுகிறது.வரும், 27ம் தேதி முதல் மே 6 வரை, 10 நாட்கள் பயிற்சி நடக்கிறது. பயிற்சியில் தங்கத்தின் விலை கணக்கிடும் முறை, கொள்முதல் செய்யும் முறை. உரை கல்லில் தங்கத்தின் தரம் அறிதல், கடன் தொகை வழங்கும் முறை, ஹால் மார்க் தரம் அறியும் விதங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகின்றன. பயிற்சியில் 18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். வயது வரம்பில்லை. கல்வி தகுதி குறைந்தது 8ம் வகுப்பு தேர்ச்சி. பயிற்சியின் இறுதியில் இந்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி முடித்தவர்கள் தேசிய கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் நகை அடகு நிதி நிறுவனங்களிலும், நகை மதிப்பீட்டாளராக பணியில் சேரலாம். மேலும் சுயமாக நகை கடை, நகை அடமான கடை நடத்த தகுதி பெறுவர். மிகப்பெரிய நகை வியாபார நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளராகவும், விற்பனையாளராகவும் பணியில் சேரலாம்.பயிற்சியில் சேர விரும்புவர்கள் 3 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ. முகவரி சான்றிதழ், கல்வி சான்றிதழ் மற்றும் பயிற்சி கட்டணம் ரூ.8,500 மட்டுமே. கூடுதல் விபரங்கள் பெற 94437 28438 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்