உள்ளூர் செய்திகள்

சென்னை பல்கலையில் இலவச கல்வி திட்டம்

சென்னை: சென்னை பல்கலையின் கீழ் இயங்கும் கல்லுாரிகளில், இலவச கல்வி திட்டத்தில் சேர, மாணவ மாணவியர், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான, 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.பல்கலை வெளியிட்ட அறிக்கை:வசதியற்ற மாணவ மாணவியர், இளநிலை படிப்புகளில் சேர்ந்து பயன்பெறும் வகையில், சென்னை பல்கலை, 2010 - 11ம் கல்வியாண்டு முதல், இலவச கல்வி திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.வரும் கல்வியாண்டில், இந்த இலசவ கல்வி திட்டத்தின்கீழ், சென்னை பல்கலையில் இணைப்பு பெற்ற தனியார் மற்றும் அரசு உதவிப் பெறும் கல்லுாரிகளில், இளநிலை படிப்புகளில் சேர மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம்.பொருளாதாரத்தில் பின்தங்கிய, ஆண்டு வருவாய் 3 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் உள்ள குடும்பத்தை சேர்ந்த மாணவ, மாணவியர் இதற்கு விண்ணப்பிக்கலாம்.இது தொடர்பாக விபரங்களை, www.unom.ac.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறியலாம். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான 15 நாட்களுக்குள், மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்