உள்ளூர் செய்திகள்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லுாரி முதலாமாண்டு துவக்கவிழா

துடியலூர்: வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான துவக்க விழா நடந்தது.கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினர், சால்ஸர் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன உதவி பொதுமேலாளர் ராஜநாயகம் பேசுகையில், "எலக்ட்ரிக்கல் வாகன தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அதற்கேற்ப தொழில்நுட்ப பயிற்சி பெறுவது அவசியம். தொழில் துறையில் ஏற்படும் மாற்றங்கள், வளர்ச்சி, புதிய தொழில்நுட்பங்களை அப்டேட் செய்தால் மட்டுமே போட்டிகளை சமாளிக்க முடியும்," என்றார்.கடந்த கல்வியாண்டில் வாரிய தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்