மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கல்
கிருஷ்ணகிரி: மாற்றுத்திறன் மாணவர்களுக்கு, 26.75 லட்சம் ரூபாய் மதிப்பிலான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன.கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்விதுறை சார்பில், 10 ஒன்றியத்தை சார்ந்த மாற்றுத்திறன் மாணவர்களுக்கு, அலிம்கோ உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி, புதுார் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. அலிம்கோ செயற்கை உறுப்பு நிபுணர் மற்றும் எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் ஜெனிப்பர், மறுவாழ்வு அலுவலர் அமன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கணேசன், ராஜா, வட்டார வள மைய மேற்பார்வையாளர் அசோக், தலைமை ஆசிரியர் கிரிஜா, ஆசிரியர் பயிற்றுனர் தமிழரசு ஆகியோர் மாணவ, மாணவியருக்கு உதவி உபகரணங்களை வழங்கினர்.இதில், 23 சி.பி., வீல் சேர், 68 காதொலி கருவி, 56 சக்கர நாற்காலி, 21 ரோலேட்டர், 10 காலிப்பர், 147 கல்வி உபகரண பை என மொத்தம், 274 பேருக்கு, 26.75 லட்சம் ரூபாய் மதிப்பிலான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன. மேலும், உபகரணங்களை பயன்படுத்தும் விதம் குறித்து, விளக்கம் அளிக்கப்பட்டது.முகாம் ஏற்பாடுகளை, சிறப்பு பயிற்றுனர்கள் அருண்குமார், ரமேஷ், ஜித்தன் இயன்முறை மருத்துவர்கள் ஜெயசித்ரா, அன்பு, அசோக், நெல்சன், கஜலட்சுமி, நதிய சாந்தி, எழிலரசி, சவிதா, கோகிலா, சிறப்பு மைய பணியாளர்கள் கல்பனா, சந்திரா ஆகியோர் செய்திருந்தனர்.