கண்ணங்குடி மாணவிகள் தேசிய போட்டிக்கு தகுதி
சிவகங்கை: திருப்பூரில் நடந்த மாநில மல்யுத்த போட்டியில் கண்ணங்குடி அரசு பள்ளி மாணவிகள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் பெற்று தேசிய போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.திருப்பூரில் தேசிய பள்ளிக்கல்வி சம்மேளனம் சார்பில் மாநில அளவிலான மல்யுத்த போட்டி நடந்தது. இதில் கண்ணங்குடி அரசு மேல்நிலை பள்ளி 9ம்வகுப்பு மாணவி எஸ்.பூர்ணிகா 44 கிலோ எடைபிரிவில் 5 சுற்றுகளிலும் 2ம் இடம் பிடித்து வெள்ளி பதக்கமும், நிஷா 32 கிலோ எடை பிரிவில் முதலிடம் பிடித்து தங்க பதக்கமும் பெற்றார். உத்தரபிரதேசத்தில் நடக்க உள்ள தேசிய போட்டிகளில் பங்கேற்க இருவரும் தகுதி பெற்றுள்ளனர். மாணவிகளை தலைமை ஆசிரியை பாக்கியம், உடற்கல்வி ஆசிரியர் மணிமாலா பாராட்டினர்.