உள்ளூர் செய்திகள்

புதிய பாரத எழுத்தறிவு கற்போர்களுக்கான தேர்வு

நாமக்கல்: 'புதிய பாரத எழுத்தறிவு' திட்டத்தில் படித்து வரும் கற்போர்களுக்கான தேர்வு, மாநிலம் முழுவதும் நேற்று நடந்தது.நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 15 ஒன்றியங்களில், 904 மையங்களில், 19,979 பேருக்கு இந்த தேர்வு நடந்தது. இதை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் நடத்தினர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாதவன், கல்வி அலுவலர்கள் பச்சமுத்து, புருஷோத்தமன், மாவட்ட உதவி திட்ட அலுவலர் அருள்தாஸ், ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்