சகஜானந்தா ஐ.டி.ஐ., யில் பட்டமளிப்பு விழா
சிதம்பரம்: சிதம்பரம் சுவாமி சகஜானந்தா ஐ.டி.ஐ., யில் 10ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது.முதல்வர் குந்தவி தலைமை தாங்கினார். நந்தனார் கல்விக் கழக தலைவர் மணிரத்தினம் பங்கேற்று 181 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பேசினார். விழாவில் சிதம்பரம் முத்தையா தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் ராஜன், கூடுவெளி அரசு தொழில்நுட்பக் கல்லூரி துணை முதல்வர் கிருபாநந்தினி, சி. முட்லூர் அரசு கல்லூரி பேராசிரியர் ராஜேந்திரன், புதுச்சேரி தனியார் நிறுவன மனிதவளப் பிரிவு துணை மேலாளர் ராஜா வாழ்த்துரை வழங்கினர்.அலுவலக மேலாளர் ராஜாக்கண்ணு நன்றி கூறினார்.