பள்ளிக் கல்வி இணை இயக்குனர்கள் மாற்றம்
சென்னை: பள்ளிக் கல்வித் துறையில் இணை இயக்குனர்கள் மூன்று பேர் மாற்றப்பட்டுள்ளனர். எஸ்.எஸ்.ஏ., இயக்ககத்தில் இணை இயக்குனராக, பணியாற்றி வந்த இளங்கோவன், பள்ளிக் கல்வி இயக்ககத்தில் இடைநிலைக் கல்வி இணை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். விடுமுறையில் இருந்து பணிக்கு திரும்பி வந்த பள்ளிக் கல்வி இணை இயக்குனர் தர்ம.ராஜேந்திரன், எஸ்.எஸ்.ஏ., இணை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். விடைத்தாள் நகல் பணியில் இருந்த இணை இயக்குனர் அன்பழகன், ஆசிரியர் பயிற்சித் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.