உள்ளூர் செய்திகள்

அதிகபட்ச சம்பளம் பெற்றார் ஐ.ஐ.எம். மாணவர்

ஐ.ஐ.எம்-இந்தூரை சேர்ந்த ஒரு மாணவருக்கு வருடம் 32 லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது. ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்களில் படித்து வெளிவரும் மாணவர்களுக்கு அதிக சம்பளத்தில் வேலை கிடைக்கும் என்பது நமக்கெல்லாம் தெரிந்த ஒன்றுதான். ஆனால் எப்போதும் இல்லாத வகையில் அதிகபட்சமாக தற்போது ஒருவருக்கு வருடம் 32 லட்சத்தில் வேலை கிடைத்துள்ளது. ஒரு முதலீட்டு வங்கியானது தனது இந்திய கிளையில் இந்த சம்பளத்திற்கு, 2009-2011 கல்வியாண்டை சேர்ந்த ஒரு மாணவருக்கு வேலை வழங்கியுள்ளது. கடந்த வருடம் ரூ.28 லட்சம் ஆண்டு வருமானமாக ஒரு மாணவருக்கு வேலை கிடைத்தது. அப்போது அதுதான் அதிகபட்ச சம்பளமாக இருந்தது. பி.ஜி.டி.எம். மாணவர்களுக்கு கடந்த வருடத்தை விட, இந்த வருடம் சம்பளம் 27 % கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்