உள்ளூர் செய்திகள்

கல்வி இல்லையெனில் சுதந்திரம் பறிபோகும்: சிபல்

சுதந்திரமான பேச்சுரிமையின் மூலம் குழந்தைகளுக்கு கல்வி வழங்கப்படவில்லை எனில், அவர்கள் தங்களின் பேச்சு சுதந்திரத்தையும், தொழில் சுதந்திரத்தையும் அனுபவிக்க முடியாது என்றார். ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய கபில் சிபல் இதுசம்பந்தமாக மேலும் கூறியதாவது, "தங்களின் படிப்பை பாதியிலேயே நிறுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கிறது. 20 கோடி குழந்தைகள் பள்ளிக்கு சென்றால், அவர்களில் 14 கோடி பேர் கல்லூரிக்கு செல்வதில்லை. இதனால் சமூகத்திற்கு ஏற்படும் இழப்புகளை சிந்தித்து பார்க்க வேண்டும். எச்.எஸ்.பி.சி. தொடங்கியுள்ள "பியூச்சர் பர்ஸ்ட்"(எதிர்காலம் முதலில்) திட்டம் குழந்தைகளின் வறுமை விஷயத்தில் கவனம் செலுத்துகிறது. அதன்மூலம் பல கல்வி சம்பந்தமான திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு நாடு முழுவதும் 1 லட்சத்து 30 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறுவர்" என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்