நிதித்துறை மாணவர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு
ஐ.ஐ.எம்-கொல்கத்தாவில், இறுதி பணியாட்கள் தேர்வின்போது நிதி பிரிவில் அதிகபட்சமாக 31.3% மாணவர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். ஐ.ஐ.எம்-கொல்கத்தா இந்தியாவின் பைனான்ஸ் கேம்பஸ் என்று அறியப்படுகிறது. அந்த வகையில் ஏறக்குறைய 31.3% பணி வாய்ப்பை நிதி பிரிவு பெற்றுள்ளது. இதற்கடுத்து கன்சல்டிங் மற்றும் மார்கெடிங் பிரிவுகள் அதிக வேலை வாய்ப்பை பெற்றுள்ளன. யு.பி.எஸ்., சிட்டிகுரூப், மோர்கன் ஸ்டான்லி உள்ளிட்ட பல முக்கிய நிதி நிறுவனங்கள் ஐ.ஐ.எம்-கொல்கத்தா மாணவர்களை பணிக்கு தேர்வு செய்துள்ளன. மேலும் இந்த வருடம் புதிதாக "ஒத்திவைப்பு வேலைவாய்ப்பு" செயல்பாட்டை ஐ.ஐ.எம்-கொல்கத்தா அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி தொழில்முனைதலில் ஈடுபட விரும்பும் மாணவர்கள், சமூக துறையில் பணியாற்ற விரும்பும் மாணவர்கள் மற்றும் அரசு அமைப்பில் சேர்ந்து தேசிய சேவையில் ஈடுபட விரும்பும் மாணவர்கள், உயர்கல்வி கற்க விரும்பும் மாணவர்கள் ஆகியோர் அடுத்த 3 வருடங்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் பணியில் சேர்ந்து கொள்ளலாம்.