உள்ளூர் செய்திகள்

ஆசிரியர் கல்வி பட்டயத் தேர்வு விண்ணப்பம்

வரும் ஜுன் மாதம் நடைபெற உள்ள ஆசிரியர் கல்வி பட்டயத் தேர்வில் பங்கேற்க விரும்பும் தனித்தேர்வர்களுக்கு விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதற்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 12ஆம் தேதி வரை விநியோகிக்கப்படும். இது குறித்து அரசுத் தேர்வுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல் மற்றும் இரண்டாம் ஆண்டுக்கான பாடங்களில் தேர்வெழுதத் தகுதி வாய்ந்த தனித்தேர்வர்கள், அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளில் நிரந்தரப் பணியில் காலமுறை ஊதியத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் தொழிலாசிரியர்கள், மேல்நிலைக் கல்வி தொழிற்கல்வி பாடத்திட்டத்தின் கீழ் எஸ்.ஜி.டி.டி. தேர்வு எழுதி தோல்வியுற்றோர் ஆகியோர் இதற்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு எழுத தகுதியானவர்கள் அருகில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். ஏப்ரல் 12ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். 2001-2002 ஆம் ஆண்டு அறிமுகப்பத்தப்பட்ட பாடத்திட்டத்தின் கீழ் தேர்வெழுதி தோல்வியுற்ற தனித்தேர்வர்கள் முதலாமாண்டுக்குரிய 3 பாடங்கள் மற்றும் இரண்மாண்டுக்குரிய 5 பாடங்களுள் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். பழைய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வெழுத இதுவே இறுதி வாய்ப்பாகும். முதன் முறையாக விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்களும், ஏற்கனவே தேர்வெழுதி தோல்வியுற்ற தேர்வர்களும், இப்போது அமலில் உள்ள புதிய பாடத்திட்டத்தின்படி முதலாமாண்டுக்குரிய 7 பாடங்களுக்கும் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தனித்தேர்வர்களின் பணிச்சான்றின் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொண்ட பின்னரே, தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்