உள்ளூர் செய்திகள்

முதல் முறை வேலையில் சேர்ந்தோருக்கு ரூ.15,000

புதுடில்லி: முதல் முறையாக வேலை பெற்று பி.எப்., கணக்கில் இணைந்த, 15 லட்சம் ஊழியர்களுக்கு மத்திய அரசின் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 15,000 ரூபாய் ஊக்கத்தொகையின் முதல் தவணையை பிரதமர் மோடி இன்று விடுவிக்க உள்ளார்.நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்க, 'பிரதம மந்திரி விக்சித் பாரத் வேலைவாய்ப்பு திட்டம்' கடந்த ஆண்டு துவங்கப்பட்டது.ஊக்கத்தொகைஇந்த திட்டத்தின்படி தனியார் ஊழியர்களுக்கு மொத்தம் 15,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.அதற்கான தகுதி, முதல் முறையாக வேலை பெற்று, பி.எப்., கணக்கில் இணைந்திருக்க வேண்டும். மாத சம்பளம் 1 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் பணியில் இருக்க வேண்டும்.வேலையில் இணைந்து ஆறு மாதத்தை பூர்த்தி செய்திருந்தால் முதல் தவணையில் 7,500 ரூபாய், ஓராண்டை பூர்த்தி செய்திருந்தால் இரண்டாவது தவணையாக 7,500 ரூபாய் என மொத்தம் 15,000 ரூபாய் நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.அதே போல் புதிய ஊழியர்களை பணியில் சேர்க்கும் நிறுவனத்துக்கு ஒரு ஊழியருக்கு மாதம், 3,000 ரூபாய் ஊக்கத்தொகை என இரண்டு ஆண்டுகள் வரை வழங்கப்படும்.கடந்த ஏப்ரலில் ஆறு மாத பணி காலத்தை பூர்த்தி செய்த 4.4 லட்சம் ஊழியர்களுக்கு 446 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டது. அதில் 18,000 நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.இந்நிலையில், 15 லட்சம் ஊழியர்களுக்கான தவணையாக 2,400 கோடி ரூபாயை பிரதமர் மோடி இன்று விடுவிக்க உள்ளார்.டில்லி விஞ்ஞான் பவனில் நடக்கும் நிகழ்ச்சியில் பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு ஊக்கத்தொகையை நேரடியாக விடுவிக்க உள்ளார்.வேலை வாய்ப்புகடந்த 2025 ஆகஸ்ட்டில் இத்திட்டம் துவங்கப்பட்டதில் இருந்து தற்போது வரை புதிதாக 63 லட்சம் பேர் வேலை பெற்றுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அவர்களில் 30 சதவீதம் பேர் பெண்கள்.இத்திட்டத்தின் கீழ், 2027க்குள் 3 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், இதற்கு, 99,446 கோடி ரூபாய் செலவிடவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்