ஒரே கையெழுத்தில் விடைத்தாள்கள்: பிளஸ் 2 தேர்வில் முறைகேடு
மதுரை: மதுரையில் ஒரே பள்ளியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் மூன்று பாடங்களில் சென்டம் மதிப்பெண் பெற்றதில் முறைகேடு நடந்திருப்பது குறித்து, மதுரை கல்வி அலுவலர்களிடம், சென்னையில் விசாரணை நடக்கிறது.மார்ச்சில் பிளஸ் 2 தேர்வு நடந்தது. ஏப்ரல் 5ல் விடைத்தாள்கள் திருத்தும் பணி துவங்கியது. மதுரை விடைத்தாள்கள் திருத்தப்பட்ட முகாமில், இரண்டு மாணவர்களின் விடைத்தாள்கள் ஒரே கையெழுத்தாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரும் சென் டம் மதிப்பெண் பெற்றிருந்தனர். சந்தேகத்தின் அடிப்படையில் தேர்வுத்துறை நடத்திய விசாரணை யில், இரண்டு விடைத் தாள்களும் மதுரையைச் சேர்ந்த ஒரே பள்ளியில் படிக்கும் இரண்டு மாண வர்களுடையது என்றும், தேர்வின் போது இருவரும் அடுத்தடுத்த பதிவெண்கள் பெற்றிருந்ததும் தெரியவந்தது. மேலும் அவர்கள் இருவரும் வேதியியல், இயற்பியல் உட்பட மூன்று பாடங்களிலும் சென்டம் பெற்றிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இருவர் கையெழுத்தும் ஒன்றாக இருந்ததால், இது கல்வித்துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேர்வுத்துறை அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட தேர்வு நடந்த பள்ளியிலும், விடைத்தாள்கள் கலக்கும் பணியின்போதும் சம்பந்தப்பட்ட நாட்களில் கண்காணிப்பு கேமரா செயல்படவில்லை என தெரியவந்தது. இதில் இருந்து, மாற்றுப் பணியின்போது விடைத்தாள்களை மாற்றியிருக்கலாம் என்ற அடிப்படையில் சென்டம் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் தேர்வு எழுதிய பள்ளியில், தேர்வு அறை கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள், தேர்வு மைய முதன்மை கண்கா ணிப்பாளர் ஆகியோரை விசாரணைக்கு அழைத்துள்ளனர். மேலும், விடைத்தாள் திருத்தும் முகாம் மாற்று பணியில் ஈடுபட்ட அலுவலர்கள், ஆய்வு உதவியாளர்கள் என 15க்கும் மேற்பட்டோரை அழைத்து சென்னையில் விசாரணை நடக்கிறது. இது ஆசிரியர்கள், அலுவலர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.- நமது நிருபர் -