பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் மார்ச் 20ல் பதிவிறக்கலாம்
சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட்டுகளை மார்ச் 20ம் தேதி பதிவிறக்க அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26ல் துவங்க உள்ளது. இதில் 12,616 பள்ளிகளை சேர்ந்த 4.52 லட்சம் மாணவியர் உள்பட 9.10 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். இவர்களுக்கு 4107 தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன. இந்நிலையில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய ஹால் டிக்கெட்டுகளை மார்ச் 20ல்பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.