மதுரை எய்ம்ஸ் திட்ட மதிப்பீடு ரூ.2,000 கோடியாக அதிகரிப்பு
மதுரை: மதுரை, &'எய்ம்ஸ்&' திட்ட மதிப்பீடு, 2,000 கோடி ரூபாயாக உயர்ந்திருப்பது, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. இதற்கான கடன் ஒப்பந்தம், மார்ச்சில் கையெழுத்தாகிறது.மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு, 2019 ஜனவரியில், பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இது, 1,264 கோடி ரூபாய் திட்டம் என தெரிவிக்கப்பட்டது. நிதியை, &'ஜிக்கா&' எனும் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிறுவனம், கடனாக அளிக்க இருக்கிறது.இந்தியா - ஜப்பான் இடையே, இதற்கான கடன் ஒப்பந்தம் கையெழுத்தாவதில் தாமதம் தொடர்கிறது.இந்நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம், எய்ம்ஸ் நிலம், கட்டுமான பணி, மாணவர் சேர்க்கை உள்ளிட்ட விபரங்களை, தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டிய ராஜா கோரினார்.மத்திய அரசு அளித்த பதில்:மதுரை எய்ம்ஸ்க்கு கடன் வழங்குவது தொடர்பாக, இந்தியாவில் உள்ள ஜிக்கா அதிகாரிகள், ஜப்பான் ஜிக்கா அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் டிச., 24ல் நடந்தது. 2021 மார்ச்சில் கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும். மொத்த மதிப்பீடு, 2,000 ஆயிரம் கோடி ரூபாய். இதில், 85 சதவீதத்தை ஜிக்கா வழங்கும் மருத்துவமனையோடு சேர்ந்து அமையும் மருத்துவ, நர்சிங் கல்லுாரி வகுப்புகள், எய்ம்ஸ் கட்டடம் முழு வடிவம் பெற்ற பின்தான் துவங்கும். முன்கூட்டியே துவங்குவதற்காக, தற்காலிக கட்டடங்கள் எதுவும் அடையாளம் காணப்படவில்லை.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை, எய்ம்ஸ் திட்டத்திற்கு, 1,264 கோடி என்றே குறிப்பிடப்பட்டு வந்த நிலையில், 2,000 கோடி என புதிய தகவலை மத்திய அரசு தந்துள்ளது. இதில், 85 சதவீதத்தை ஜிக்கா கடனாக தரும். எஞ்சிய, 15 சதவீதம் எப்படி பெறப்படும் என்பது தெரிவிக்கப்படவில்லை.நிலம் ஒப்படைப்புசமீபத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்ட கேள்விகளுக்கு, &'இன்னும் மாநில அரசு நிலத்தை ஒப்படைக்கவில்லை&' என, மத்திய அரசுதெரிவித்தது. இதை மாநில அரசு மறுத்தது. இந்த விவகாரம் சர்ச்சையானது.நேற்றைய பதிலில், &'நில ஒப்படைப்பு குறித்து, புதிய தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், மதுரை எய்ம்ஸ்க்கு, 222.47 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு தந்துள்ளது. நில ஒப்படைப்பு சான்றிதழை நவ.,3ல் மதுரை கலெக்டர் அனுப்பி இருக்கிறார்&' என தெரிவித்துள்ளது.