உள்ளூர் செய்திகள்

இந்தியாவில் கட்டட வசதி இல்லாத 23 ஆயிரம் பள்ளிகள்!

கல்வி வளர்ச்சிக்காக மத்திய அரசு கணிசமான நிதியை ஒதுக்கி வரும் நிலையிலும், தனியார் அமைப்புகளால் நடத்தப்படும் 7,827 பள்ளிகள் உட்பட 22 ஆயிரத்து 762 பள்ளிகளுக்கு கட்டட வசதி இல்லை. இதுதவிர, ஆயிரத்து 757 பள்ளிகள் குடிசைகளில் செயல்படுகிறது. இவற்றில், நாட்டிலேயே மிக மோசமான மாநிலமாக மத்திய பிரதேசம் விளங்குகிறது. இம்மாநிலத்தில் மட்டும் 4 ஆயிரத்து 400 பள்ளிகள் திறந்தவெளியில் செயல்படுகிறது. பீகாரில் 3 ஆயிரத்து 424 பள்ளிகளுக்கும், உத்தரபிரதேசத்தில் 2 ஆயிரத்து 200 பள்ளிகளுக்கும் கட்டடம் கிடையாது. கேரளா, தமிழகம், மிசோரம், நாகாலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களில் இதுபோன்ற நிலை இல்லை என்றாலும், நாட்டிலேயே தமிழகம் தான் அதிகப்படியான குடிசை பள்ளிகளை கொண்டுள்ளது. கும்பகோண சம்பவம் நிகழ்ந்து பல ஆண்டுகளாகியும் தமிழகத்தில் இன்னும் 300 பள்ளிகள் குடிசைகளில் செயல்படுவதாக தகவல் தெரிவிக்கிறது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக தகவல்களின்படி, நாட்டிலுள்ள 8 லட்சத்து 13 ஆயிரம் அரசு பள்ளிகளில் 6 லட்சத்து 61 ஆயிரத்து 117 பள்ளிகள் தேவையான கட்டட வசதிகளை பெற்றிருக்கின்றன. 97 ஆயிரத்து 479 பள்ளிகள் ஓரளவு கட்டட வசதிகளை பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்