கே.வி., பள்ளி விண்ணப்பங்கள் ஜூலை 24க்குள் சமர்ப்பியுங்கள்
தேனி: தேனி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்கு பெற்ற விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஜூலை 24க்குள் சமர்ப்பிக்க கலெக்டர் வைத்திநாதன் அறிவுறுத்தி உள்ளார்.அவர் தெரிவித்துள்ளதாவது: கே.வி., பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்கான படிவங்கள் ஜூலை 15 முதல் ஜூலை 24 வரை வழங்கப்படும். படிவங்கள் பெற்ற பெற்றோர் அதனை பூர்த்தி செய்து, மாணவர்கள் பிறப்பு சான்றிதழ் நகல், ஜாதி சான்றிதழ் நகல், மத்திய, மாநில அரசு ஊழியர்களின் பணிச்சான்றிதழ், பணிமாறுதல் சான்றிதழ், குடியிருப்பு ஆவணம், மாணவர்கள், பெற்றோர் ஆதார் ஆகிய ஆவணங்களுடன் கே.வி., பள்ளி அலுவலகத்தில் ஜூலை 19 முதல் 24 மாலை 05:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.