சர்வதேச செஸ் போட்டி: ஜூலை 25ல் துவக்கம்
விருதுநகர்: விருதுநகரில் ஜூலை 25 முதல் 30 வரை சர்வதேச செஸ் போட்டி நடக்க உள்ளது. இதில் 450 வீரர்கள், ஒரு கிரான் மாஸ்டர் மற்றும் 17 சர்வதேச மாஸ்டர்கள் கலந்து கொள்வதாக அகில இந்திய பன்னாட்டு செஸ் கழக தலைவர் அனந்தராமன் கூறினார். விருதுநகரில் அவர் கூறியதாவது: சர்வதேச செஸ் போட்டி பல்வேறு நிலைகளில் விருதுநகரில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க இது வரை 250 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். மேலும் 150 பேர் வரை பங்கேற்பர். இதில் பங்குபெறும் 162 வீரர்கள் உலக செஸ் தரப்பட்டியலில் இடம் பெற்றவர்கள். முதலிடம் பெறுபவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது. விருதுநகர் செஸ் கிளப் தலைவர் சங்கர பாண்டியன், செயலாளர் சசிதரன், பொருளாளர் மாரியப்பன் உடனிருந்தனர்.