திருச்சி என்.ஐ.டி-ல் பிரக்யான் 25
திருச்சி: திருச்சி என்.ஐ.டி கல்லூரியில் பிரக்யான் நிகழ்ச்சியின் முதல் நாள் நிகழ்வு பணிமனை பயிற்சி பட்டறைகளுடன் நடந்தது.நாள் தொடக்கத்தில் கண்காட்சி,சங்கம், இன்ஜீனியம் (இஎஸ்ஐ) தொடக்க விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களின் உரையுடன் தொடங்கிய நிகழ்வில் சர்க்யூட்ரிக்ஸ், கேடபுல்ட் க்ளாஷ், ரவுண்டம் அப், எக்கோச் ஆப் எடர்னிட்டி போன்ற விறுவிறுப்பான போட்டிகள், சாம்சங் ஆர் & டி, அப்ஸ்டாக்ஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் போன்றமுன்னணி நிறுவனங்களின் பணிமனைகள் மாணவர்களின் திறன்களை வளர்ப்பதாக அமைந்தது.விவேக் படேலின் ஒளி மணல் கலை, கலைஞர்களின் ஒளி , இதையுடன் நடந்த நடன நிகழ்ச்சிகள் மாணவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தின.