ஆட்குறைப்பு நேரத்தில் புதிதாக ஆளெடுக்கும் 3 நிதி நிறுவனங்கள்!
கடந்த மூன்று மாதங்களில் ரிலையன்ஸ் மணி நிறுவனம் 300 பேரை வேலைக்கு எடுத்துள்ளது. கடந்த ஆறுமாதங்களில் மொத்தம் 700 பேரை புதிதாக இந்த நிறுவனம் வேலைக்கு எடுத்துள்ளது. வெளிநாடுகளிலும் தனது விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எச்.டி.எப்.சி., செக்யூரிட்டிஸ் நிறுவனம் கடந்த ஏழு மாதங்களில் புதிதாக 22 கிளைகளைத் தொடங்கியுள்ளது. நடப்பு நிதியாண்டுக்குள் புதிதாக மொத்தம் 45 கிளைகளைத் தொடங்க வேண்டும் என்பது இந்த நிறுவனத்தின் திட்டம். ஏற்கெனவே இந்த நிறுவனம் 400 மாணவர்களைத் தேர்வு செய்துள்ளது. இந்த நிதியாண்டின் முடிவுக்குள் மேலும் 200 பேரைத் தேர்வு செய்ய எச்.டி.எப்.சி., செக்யூரிட்டிஸ் முடிவு செய்துள்ளது. இதேபோல, ரன்பாக்ஸி லேப்ஸ் நிறுவனத்தில் பெரும்பான்மை உரிமையாளர்களின் ரெலிகார் செக்யூரிட்டிஸ் நிறுவனமும் விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. அதற்காக புதிய பணியாளர்களைத் தேர்வு செய்ய உள்ளது.