உள்ளூர் செய்திகள்

சென்னை கிண்டி மகளிர் ஐ.டி.ஐ.,க்கு 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை: சென்னை, கிண்டி மகளிர் ஐ.டி.ஐ.,யில் வழங்கப்படும் படிப்புகளுக்கு, வரும், 30ம் தேதி வரை, விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, கிண்டி மகளிர் ஐ.டி.ஐ.,யில், கருவிகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் சாதனங்கள் பராமரிப்பு, ஆடை வடிவமைத்தல் மற்றும் தையல், பூ தையல் மற்றும் ஊசி வேலைப்பாடு, துணி வெட்டுதல் மற்றும் தைத்தல், சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சு உள்ளிட்ட பாடப்பிரிவுகள் கற்பிக்கப்படுகின்றன. இப்பயிற்சியில் சேர, வயது வரம்பு கிடையாது; பயிற்சி கட்டணம் இல்லை; மாதந்தோறும், 500 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். பயிற்சி முடிந்த பின், மத்திய அரசின் சான்று வழங்கப்படும். தேர்ச்சி பெற்று, மாநில அளவில் முதலிடம் வருபவர்களுக்கு, முதல்வர் விருதும், தேசிய அளவில் முதலிடம் பெறுபவர்களுக்கு ஜனாதிபதி விருதும் வழங்கப்படுகிறது. மேலும் தகவலுக்கு, 044 2250 1982, 94449 19012 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இப்பயிற்சி சேர, செப்., 30ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என, கல்லூரி முதல்வர் புஷ்பராஜ் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்