உள்ளூர் செய்திகள்

சென்னை ஐஐடி- ல் பாதுகாப்பான மற்றும் நம்பத்தகுந்த ஏஐ குறித்த 2 நாள் மாநாடு

சென்னை: ஐஐடி மதராஸ் பொறுப்பான செயற்கை நுண்ணறிவு மையம் (இஆர்ஏஐ) சார்பில் 'பாதுகாப்பான மற்றும் நம்பகமான ஏஐ' குறித்து இரண்டு நாள் மாநாடு 10 மற்றும் 11 டிசம்பர் தேதிகளில் நடைபெற்றது. அரசு, தொழில் துறை, கல்வியகம் மற்றும் 100-க்கும் மேற்பட்ட உலகச் செயல்நுட்ப நிபுணர்கள் கலந்து கொண்ட இந்த மாநாடு, ஏஐ பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் ஆட்சிமுறை வழிகாட்டுதல்களை வடிவமைப்பதில் உலக தெற்கின் பங்கைக் கூட்டும் நோக்கத்துடன் நடத்தப்பட்டது.மாநாட்டை துவக்கி வைத்த தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, “நம் மக்களுக்கு பயன்படும் நல்ல ஏஐ அமைப்புகளை உருவாக்க கொள்கை மாற்றங்கள் அவசியம். தமிழ்நாட்டின் குறிக்கோள் 'ஏஐ-முதல்' மாநிலமாக மாறுவது. தொழில்நுட்பம் அனைவரையும் சென்றடையும் போது மட்டுமே அது சக்திவாய்ந்தது; யாரையும் தவிர்த்துவிடும் போது அதன் மதிப்பு குறையும்” என்று தெரிவித்தார்.சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி,“ஏஐ இன்று மக்களின் அன்றாட வாழ்க்கையின் நெருக்கமான பகுதி ஆகிவிட்டது. ஆரோக்கியம் முதல் கல்வி வரை ஏஐ வழிகாட்டும் காலம் இது. எனவே பாதுகாப்பான மற்றும் நம்பத்தகுந்த ஏஐ மிக முக்கியமானது” என்றார்.இந்தியா ஏஐ மிஷன் இயக்குநர் முகமது சபிருல்லா, “112 நாடுகளிலிருந்து நிபுணர்கள் இணைந்து செயல்படும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான ஏஐ குழுவின் பரிந்துரைகள் நேரடியாக இந்திய ஏஐ தாக்க உச்சி மாநாடு 2026 அறிவிப்பில் இடம்பெறும்” எனக் குறிப்பிட்டார்.பாதுகாப்பான மற்றும் நம்பகமான ஏஐ குழுவை தலைமை தாங்கும் பேராசிரியர் பாலராமன் ரவீந்திரன், “பொறுப்பான ஏஐ கொள்கை நடைமுறையில் அமல்பட வேண்டிய நேரம் இது. சமத்துவமான, பாதுகாப்பான ஏஐ சூழலை உருவாக்குவதற்கான வழிகாட்டுதல்களை இந்த மாநாடு மேலும் வலுப்படுத்துகிறது” என்று தெரிவித்தார்.இரண்டாம் நாள் அமர்வில் எம்எல் காமன்ஸ் நிறுவனத்தின் பீட்டர் மேட்ஸன் ஆன்லைன் முக்கிய உரையாற்றினார். ஏஐ பாதுகாப்பு பொது உருவாக்கம், உலக தெற்குக்கான ஏஐ ஆட்சிக் கொள்கை செயல்படுத்தல் போன்ற தலைப்புகளில் குழு விவாதங்கள் நடைபெற்றன. இந்த மாநாட்டில் உருவான பரிந்துரைகள் வரவிருக்கும் இந்திய ஏஐ தாக்க உச்சி மாநாடு2026-க்கு அடிப்படை தகவல்களாக அமையும் என தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்