பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கான தேர்வு பிப்.,4க்கு ஒத்திவைப்பு
சென்னை: பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு பிப்.,4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வு ஜன.,7 ம் தேதி நடைபெற இருந்தது. ஆனால், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பை கருத்தில் கொண்டு இந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. வட்டார வள மைய ஆசிரியர் தேர்வும் பிப்.,4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.