தேசிய அளவிலான அபாகஸ் போட்டியில் 56 பேர் வெற்றிபெற்று சாதனை
கச்சிராயபாளையம்: தேசிய அளவிலான அபாகஸ் போட்டியில் வாசவி அகாடமி பிரைன் ஓ பிரைன் மாணவர்கள் 56 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். கச்சிராயபாளையம் மற்றும் சின்னசேலத்தில் உள்ள வாசவி அகாடமி பிரைன் ஓ பிரைன் மையத்திலிருந்து கடந்த மாதம் 26ம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் நடந்த தேசிய அபாகஸ் போட்டியில் 73 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கச்சிராயபாளையம் வாசவி அகாடமி பிரைன் ஓ பிரைன் மையத்தை சேர்ந்த வசீகரன், ஆகாஷ், கோமலதா, தீபன்ராஜ், சிவங்கரி, சிவஹரி, ஹரிபாலா, பிரவீணா, சின்னசேலம் மையத்தை சேர்ந்த சஞ்சீவ், தன்ஷீகா, லிணிஷா உள்ளிட்ட 14 மாணவர்கள் கோப்பையை வென்றனர். மேலும் 20 பேர் தங்க பதக்கம், 9 பேர் வெள்ளி பதக்கம் வென்றனர். வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.