உள்ளூர் செய்திகள்

நீட் தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி; 841 பேர் பங்கேற்பு

கோவை: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, இ-பாக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வழங்கப்படும் ஆன்லைன் நீட் நுழைவுத்தேர்வுக்கான பயிற்சியில், 841 மாணவர்கள் பங்கேற்பதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.கொரோனா தொற்று காரணமாக, நீட் நுழைவுத்தேர்வு, நாடு முழுவதும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசுப்பள்ளி மாணவர்கள், இத்தேர்வில் வெற்றி பெற, மாவட்ட வாரியாக, பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டன.வார இறுதி நாட்களில், இங்கு வகுப்புகள் கையாளப்பட்டு, மாதிரி தேர்வுகள் நடத்தி, மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.இதனால், மருத்துவ படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட, 6.5 சதவீத இடஒதுக்கீட்டில், கோவையில் 14 மாணவர்கள் பயனடைந்தனர்.நடப்பாண்டில் பள்ளிகள் திறக்காததால், இ-பாக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஆன்லைன் மூலம் நீட் தேர்வு, பயிற்சி வழங்க, ஒப்பந்தம் செய்யப்பட்டது. இப்பயிற்சியில் பங்கேற்க, கோவை மாவட்டத்தில், 841 மாணவர்கள் முன்பதிவு செய்து, ஆன்லைன் வகுப்பில் படிப்பதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்