உள்ளூர் செய்திகள்

இக்னோ மாணவ சேர்க்கை அறிவிப்பு

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம், (இக்னோ) முழு நேர கல்லூரி படிப்புகளில் சேர மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இக்னோ பல்கலைக்கழகத்தில் 26 முழு நேர கல்லூரி படிப்புகள் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் வரும் ஜுலை மாதம் முதல் துவங்க உள்ளது. எம்.எஸ்சி (வேதியியல், எம்.எஸ்சி., (வாழ்க்கை அறிவியல்), எம்.ஏ. (ஜானலிசம் மற்றும் மாஸ் கம்யூனிகேஷன்) உட்பட 26 படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகிறது. மே 31ஆம் தேதியே விண்ணப்பங்களை பெறவும், பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அளிக்கவும் கடைசி நாளாகும். மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வு ஜுன் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. எம்.ஏ., சோஷியல் ஒர்க் படிப்புகளில் சேரும் மாணவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அனுப்ப கடைசி நாள் ஜுன் மாதம் 5ஆம் தேதியாகும். இவர்களுக்கு ஜுன் 15ஆம் தேதி நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்