கட்டணம் வசூலிப்பவர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
சென்னையில் கார் பார்க்கிங் சிஸ்டமில், வாகன நிறுத்து கட்டணம் வசூலிப்பவர் பணியிடத்துக்கு முன்னாள் படைவீரர்களின் வாரிசுதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. வாகன நிறுத்தும் கட்டணம் வசூலிப்பவர் பணிக்கு மாத ஊதியம் ரூ.4,560 வழங்கப்படும். தங்குமிடம் இலவசம். வருடத்துக்கு 2 இலவச சீருடை வழங்கப்படும். பி.எப்., பணித்தொகை, போனஸ் வழங்கப்படும். குடும்ப நல ஓய்வூதியம், இழப்பு காப்பீடு தொகையும் வழங்கப்படும். இதில் சேர கல்வி தகுதிச்சான்று, தந்தையின் ராணுவ பணிச்சான்று, 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் வேலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் வருகிற 20-ந் தேதிக்குள் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். மேற்கண்ட தகவலை வேலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் ச.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.