உள்ளூர் செய்திகள்

நெல்லை பல்கலை தேர்வில் குழப்பம்

நெல்லை பல்கலை தேர்வில் குழப்பம் ஏற்பட்டதால், தேர்வு ரத்து செய்யப்பட்டது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கு உட்பட்ட கல்லூரிகளில், பி.ஏ., - பி.எஸ்சி., இளங்கலை பட்டப் படிப்பின் முதலாம் ஆண்டு இரண்டாவது செமஸ்டர் தேர்வு, தற்போது நடந்து வருகிறது. நேற்று காலை நடந்த, "மதிப்புசார் கல்வி" என்ற தேர்வில் பெரும்பாலான கேள்விகள், பாடத்திற்கு சம்பந்தமில்லாமல் கேட்கப்பட்டிருந்தன. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில், 20 ஆயிரம் மாணவ, மாணவியர் தேர்வு எழுத முடியாமல் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே, நேற்றைய தேர்வு ரத்து செய்யப்பட்டது. தேர்வு நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என, பல்கலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்