உள்ளூர் செய்திகள்

படிப்பை பாதியில் விடுவோர் அதிகரிப்பு

சென்னைப் பள்ளிகளில் ஆண்டுக்கு, 2,790 பேர் படிப்பை பாதியில் கைவிடுவது, அனைவருக்கும் கல்வி இயக்கக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில், 12 வயதுக்கு உட்பட்டோர் 427 பேர் எனவும், ஒன்றாம் வகுப்பிலேயே பள்ளியை விட்டு வெளியேறும் குழந்தைகள் எண்ணிக்கை 367 எனவும் கூறப்படுகிறது. படிப்பை பாதியில் விடுவதைத் தடுக்க, 8ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்க கூடாது, 9ம் வகுப்பில் பெயிலானால், மறு தேர்வு நடத்தி பாஸ் செய்து விட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. இருந்தும் படிப்பை பாதியில் விடுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து, மாணவர், ஆசிரியர் நலச் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் அருமைநாதன் கூறும்போது, "ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி என்பதால், படிப்பை பாதியில் விடுவோர் எண்ணிக்கை குறைவாக உள்ளது. 9ம் வகுப்பில், 10 சதவீதம் வரை பாதியில் கைவிடுகின்றனர்" என்றார். "தற்போது மாணவர் சேர்க்கையின் போது, படிப்பை பாதியில் விட்டோரை மீண்டும் பள்ளியில் சேர்க்க முக்கியத்துவம் தரப்படுகிறது" என மாநகராட்சி கல்வி அதிகாரி ஒருவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்