பாரம்பரிய பொறியியல் படிப்புகள் சிறந்தவை
கணிப்பொறி அறிவியல் மற்றும் தகவல்தொடர்பு தொழில்நுட்பம் போன்ற படிப்புகள் தவிர, பாரம்பரிய பொறியியல் படிப்புகளான சிவில், மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிகல் போன்றவைகளையும் தாராளமாக தேர்வு செய்யலாம். பாரம்பரிய பொறியியல் துறைகளுக்கான வேலைவாய்ப்பு நிலைமைகள் மாறி வருகின்றன. இந்த பாரம்பரிய படிப்புகளை படித்தவர்கள், இன்று நல்ல வேலைவாய்ப்புகளை பெறுகிறார்கள். பொருளாதாரத்தின் அனைத்து துறைகளும் மீட்சி அடைந்து வருகின்றன. சிறந்த மாணவர்கள், ஐ.டி. துறை பணிகளுக்கு பதிலாக, மேற்குறிப்பிட்ட பாரம்பரிய பொறியியல் துறை பணிகளையே தேர்ந்தெடுக்கின்றனர். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, இந்தாண்டு வேலை வாய்ப்புகள் பெருகியுள்ளதோடு, ஊதிய உயர்வும் 30 சதவீதம் அதிகரித்துள்ளது.