உள்ளூர் செய்திகள்

பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பத்துடன் எந்தெந்த ஆவணங்களை இணைத்து அனுப்ப வேண்டும் என்பது பல மாணவர்களுக்கு இன்னும் தெளிவாக தெரிவதில்லை. எனவே அந்த நடைமுறையைப் பற்றி மாணவர்கள் தெளிவாக தெரிந்து வைத்துக்கொண்டால், பின்வரும் தலைமுறைகளுக்கும் தெளிவாக வழிகாட்ட முடியும். * முழுமையாக நிரப்பப்பட்ட கோடிங் சீட். * சான்றளிக்கப்பட்ட 12 ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் அல்லது அதற்கு சமமான படிப்பின் மதிப்பெண் பட்டியல் நகல். * சான்றளிக்கப்பட்ட மாற்று சான்றிதழ் நகல். * சான்றளிக்கப்பட்ட 10 ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல். * சான்றளிக்கப்பட்ட நிரந்தர ஜாதி சான்றிதழ் நகல்(தேவைப்பட்டால்). * சான்றளிக்கப்பட்ட நேட்டிவிட்டி சான்றிதழின் நகல்(தேவைப்பட்டால்). * 12 ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் வழங்கப்பட்ட ஹால் டிக்கெட்டின் நகல். * சான்றளிக்கப்பட்ட முதல் பட்டதாரி சான்றிதழுக்கான நகல்(தேவைப்பட்டால்). * டி.டி. மற்றும் தொடர்புடைய சான்றிதழுடன் கூடிய சிறப்பு ஒதுக்கீட்டு படிவம்(தேவைப்பட்டால்) * சுய முகவரி எழுதப்பட்ட, அஞ்சல்தலை ஒட்டப்பட்ட தபால் உறை. * சான்றளிக்கப்பட்ட இலங்கை தமிழ் அகதி சான்றிதழ் நகல்(தேவைப்பட்டால்). இத்தகைய ஆவணங்கள் இணைக்கப்பட்ட விண்ணப்பத்தை The Secretary Tamilnadu Engineering Admissions Anna university Chennai - 600 025 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்