உள்ளூர் செய்திகள்

கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் துவங்கின

நடப்புக் கல்வியாண்டில் அனைத்து கல்லூரிகளிலும் முதலாண்டுக்கான மாணவர் சேர்க்கை முடிந்த நிலையில், நேற்று வகுப்புகள் துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சேர்க்கை பெற்ற மாணவர்கள் அந்தந்த கல்லூரிக்கு சென்றனர். பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரி வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கும் நிலையில், முதல் முறையாக கல்லூரி செல்வதால் பலரும் பரவசத்தில் இருந்தனர். பெரும்பாலான கல்லூரிகளில் ஜூனியர் மாணவர்களை, சீனியர்கள் திலகமிட்டு வரவேற்றனர். ஒருவருக்கொருவர் பூக்களை பரிமாறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கல்லூரி பேராசிரியர்கள் கூறுகையில், "முதல் முறையாக கல்லூரிக்கு வருவதால் மாணவர்கள் பலரும் பதட்டமாக இருப்பர். ராகிங் கொடுமை இருக்குமோ எனவும் நினைக்கக்கூடும். அத்துமீறி நடந்தால் இங்கு வைக்கப்பட்டுள்ள ராகிங் புகார் பெட்டியில், பிரச்னை குறித்து கடிதம் போடலாம் அல்லது குறிப்பிட்டுள்ள எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்