வேகம் பெறும் வேலைச் சூழல்
ஐ.டி., மற்றும் ஐ.டி.இ.எஸ்., துறைகளில் வேலை அதிகரித்திருப்பதன் காரணமாக இந்திய வேலை வாய்ப்புச் சூழல் கடந்த சில வாரங்களில் புதிய உத்வேகம் பெற்றிருப்பதாக நௌக்ரி டாட் காம் தெரிவித்துள்ளது. மே மாதத்தை விட 4 சதவீதம் வேலை தொடர்பான இதன் அட்டவணை அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தோடு ஒப்பிட்டால் 19 சதவீதம் இது அதிகரித்திருப்பதாக நௌக்ரி தெரிவித்துள்ளது. ஐ.டி., ஐ.டி.இ.எஸ்., தவிர பார்மா, பயோடெக் மற்றும் இன்சூரன்ஸ் துறைகளிலும் வேலைகள் அதிகரித்துள்ளன. பொருளாதாரம் சற்றே மந்தமாக இருந்தாலும் கூட புதிய வேலைகள் உருவாகுவதில் பிரச்னை எதுவும் இல்லை என்றும் அந்த இணைய தளம் கூறியுள்ளது. நகரங்களில் ஐதராபாத், பெங்களூரு மற்றும் சென்னையில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. கோல்கட்டாவிலும் டில்லியிலும் வேலை வாய்ப்பு அட்டவணை சரிவை சந்தித்துள்ளது.